Input your search keywords and press Enter.

திராவிட T20: உனக்கு இருபது… எனக்கு இருபது?

தமிழ் நாட்டில் கூட்டணிகளின் இறுதிச் சுற்று; அ.தி.மு.க. கூட்டணியில்  இணைகிறது தே.மு.தி.க.

பிரதமர் மோடியின் மெகா பேரணிக்கு சில மணி நேரங்கள் முன்பு அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதாக விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவிக்காமல் அறிவித்தனர்.

ஆனால் முதலில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு சென்றார்கள் தே.மு.தி.க.-வினர்.

”எங்களிடம் கொடுப்பதற்கு போதிய அளவு சீட் இல்லை என சுதீஷிடம் கூறிவிட்டேன்,” என்று துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருவதோ உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை.

பியூஷ் கோயலை சந்தித்த பிறகு சுதீஷ் பேட்டி கொடுத்தார் – “பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு முழுமையாக முடிந்த பின்பு பிரதமர் மோடியுடன் பிரச்சார மேடையில் விஜயகாந்த் பங்கேற்பார்.”

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

அ.தி.மு.க.-வுடன் பா.ஜ.க. மட்டுமே கூட்டணி சேரும் என அரசியல் நோக்கர்கள் கூறி வந்த நிலையில், திடீர் திருப்பமாக பா.ம.க.-வை வளைத்துப் போட்டது ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் தரப்பு.

7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா தொகுதி என கூட்டணியை முதலில் அறிவித்தது பா.ம.க.-அ.தி.மு.க. தான். அதே நாளில் பா.ஜ.க.-வுக்கு 5 தொகுதிகளை வழங்கி ஜெயலலிதா போன்று ஓட்டத்தில் முன்னணியில் நின்றது அ.தி.மு.க.

அ.தி.மு.க. கூட்டணி

அ.தி.மு.க.: 25

பா.ம.க.: 7 + 1 (ராஜ்ய சபா)

பா.ஜ.க.: 5

புதிய தமிழகம்: 1

புதிய நீதி கட்சி: 1

தே.மு.தி.க.: ??

த.மா.கா.: ??

என்.ஆர். காங்கிரஸ்: 1 (புதுச்சேரி)

தி.மு.க. விரைந்தது

இதையடுத்து எதிர்முகமான தி.மு.க.-வில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்தன.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இருமுறை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூட்டணியைஉறுதி செய்தார்.

சென்னை வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் தி.மு.க. கூட்டணியில், புதுச்சேரி உள்பட காங்கிரஸுக்கு10 தொகுதிகள் என கையெழுத்திடப்பட்டது.

இதையடுத்து தனது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், ஈஸ்வரனின் கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும், NDA கூட்டணியில் இருந்து அணி மாறி வந்த இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒருதொகுதியும் வழங்கப்பட்டன.

நீண்டநாள் தோழமை கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க.-வுக்குதொகுதிகளை ஒதுக்கிடுவதில் சிக்கல் நீடித்தது.

திங்கள்கிழமை வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

சி.பி.எம்.-க்கு 2 தொகுதிகள் மற்றும் ம.தி.மு.க.-வுக்கு 1 மக்களவை மற்றும் 1 ராஜ்ய சபா சீட் கொடுக்க தி.மு.க. முன்வந்தநிலையில் கூட்டணி அனைத்தும் நிறைவு செய்யப்பட்டன.

தி.மு.க. கூட்டணி

தி.மு.க.: 20

காங்கிரஸ்: 9 + 1 (புதுச்சேரி)

சி.பி.ஐ.: 2

சி.பி.எம்.: 2

வி.சி.க.: 2

ம.தி.மு.க.: 1

ஐ.யூ.எம்.எல்.:  1

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி: 1

இந்திய ஜனநாயக கட்சி: 1

கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. முந்தி தொடங்கினாலும், தி.மு.க. விரைந்து முடித்துவிட்டது.

இனி தொகுதிகளை அடையாளம் காணப்பட்டு, பிரசாரம் முடுக்கிவிடப்படும். இனி களத்தில் பல்வேறு விறுவிறுப்புகளை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *